• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் – தலைவர்கள் சிலைக்கு மாலை

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்ட, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார்.

நாகர்கோவில் வேப்பமூடில் உள்ள பெரும் தலைவர் காமராஜர் மற்றும் நாகர்கோவில் நகர பேருந்து நிலையம் பகுதியில் உள்ள குமரி தந்தை மார்சல் நேசமணி, அண்ணா விளையாட்டு திடலில் உள்ள அண்ணா, முனைவர் அம்பேத்கர், வடசேரி பகுதியில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி., மணிக்கூண்டு பகுதியில் உள்ள கலைவாணர், இந்திரா காந்தி,டதி சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்கள் இடம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் இதுவரை 10_முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி.

விளவங்கோடு தொகுதியில் ஒருவரின் ராஜினாமாவல் இடைதேர்தல் வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியவரோ அல்லது எவர் போட்டியிட்டாலும், எங்கள் கூட்டணியின் வலிமையால் டெப்பாசிட் இழக்க செய்வோம் என ராஜேஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.