• Fri. May 3rd, 2024

குமரியில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலி.., நாடாளுமன்றத் தேர்தல் உடன் விளவங்கோடு தேர்தலும் நடக்குமா.?

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் என்ன ஆறு சட்டமன்ற தொகுதிகளை கொண்டது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு திருவட்டாறு என்ற தொகுதியை கொண்டிருந்த மாவட்டம். மறு சீரமைப்பு காரணமாக திருவட்டாறு என்ற தொகுதி அகற்றப்பட்டது. 7 சட்டமன்றங்களை கொண்டிருந்த மாவட்டம் 6_தொகுதிகளை கொண்டதாக சுருங்கி போனது.

குமரி மாவட்ட அரசியல் வரலாற்றில், குமரி தந்தை மார்சல் நேசமணி, பெரும் தலைவர் காமராஜர், வசந்த குமார் மரணம் காரணமாக,குமரி மக்களவை தொகுதியில் மூன்று இடைத்தேர்தல்களை சந்தித்தது.

சட்டமன்றதை பொறுத்த மட்டில். திமுக முதல் முதலாக ஆட்சி அமைத்த காலக் கட்டத்தில். குளச்சல் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக இருந்த சிதம்பரநாடார் மரணம் அடைய(1969) நடைபெற்ற இடைத்தேர்தலில் பாலையா முதல் முதலாக காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.

பெரும் தலைவர் காமராஜர் கன்னியாகுமரியில் ஒரு மாதம் தங்கியிருந்து அவரது நேரடி பார்வையில் இடைத்தேர்தலில் காங்கிரஸயின் வெற்றியை கண் காணித்து. காங்கிரஸ் வெற்றியும் பெற்றது.

விளவங்கோடு தொகுதியில் வலிந்து ஒரு இடைத்தேர்தல், இப்போது விஜயதரணி யின் ராஜினாமாவால் புகுத்தப்பட்டுள்ளது. மக்களவை பொதுத் தேர்தல் உடன் விளவங்கோடு இடைத் தேர்தலும் நடக்கலாம்.

1911_1916,1921_மூன்று முறை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதரணியின் தனித்த அரசியலில் பதவி ஆசை காரணமாக.விளவங்கோடு தொகுதியில் இன்னும் 22_மாதங்கள் கால அவகாசம் இருக்கும் நிலையில், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வாக்களித்த மக்களிடம் குறைந்த பட்ச அரசியல் நாகரித்துடன் ஒரு நன்றியை ஆவது ராஜினாமா கடிதத்தை, சட்டமன்ற தலைவருக்கு கொடுக்கும் முன் பத்திரிகைகளில் ஒரு அறிவிப்பாக தெரிவித்து இருக்கலாமே? என்ற கருத்தை. விளவங்கோடு தொகுதியில் பல்வேறு நிலை மக்களிடம் அவரது ராஜினாமா பற்றி கேட்டபோது வெளிப்படுத்திய கருத்துக்கு மத்தியில் பல் நிலை பெண்களிடம் மீண்டும் விஜயதரணி வாக்கு கேட்டு வந்தால் என்ற கேள்விக்கு பலரும் கோபமாக,வாக்களிக்க மாட்டோம் என்பதே பெரும் பான்மையரது பதிலாக இருந்தது.

பாஜக இந்த தொகுதியில் ஒரு சக்தி மிக்க அரசியல் கட்சியாக இருந்த போதும், சம்பந்தப்பட்ட தொகுதியில் பாஜகவின் ரியல் ஒரு உற்சாகத்தை பார்க்க முடியவில்லை.

குமரி மாவட்டம் முழுவதும் பாஜக வினர், கட்சி தாவி அவர்களது இயக்கத்திற்கு வந்ததை வரவேற்று, தினசரி பத்திரிகை களில் ஒரு வரி விளம்பரத்தை கூட காண முடியவில்லை.?

சாதாரணமாக கடந்த சில மாதங்களாக அந்த கட்சியில் இருந்து,இந்த கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார்கள் என பொன்.இராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தர்மராஜ்க்கு சால்வை அணிவித்து பாஜகாவில் இணைந்தார்கள் என்ற பரபரப்பை வெளிப்படுத்தும் குமரி மாவட்டத்தில் பாஜகவினர் மத்தியில் விஜயதரணியின்
பாஜக தாவல் உற்சாகத்தை ஏன் ஏற்படுத்தவில்லை என்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு ஆச்சரியத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளது.

குமரியின் முதல் இடைத்தேர்தல் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் மரணத்தால் இயல்பாக வந்த இடைத்தேர்தல்.

குமரியில் இரண்டாவது விளவங்கோடு இடைத்தேர்தல் விஜயதரணியின் ராஜினாமா காரணமாக வலிய புகுத்தப்பட்ட இடைத்தேர்தல் என்ற கருத்து. குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ள மக்களின் கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *