• Fri. Apr 19th, 2024

இலக்கியம்

Byவிஷா

Dec 2, 2022

நற்றிணைப் பாடல் 68:

”விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்” என
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி,
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்,
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே;
”செல்க” என விடுநள்மன் கொல்லோ? எல் உமிழ்ந்து,
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள்,
கொடி நுடங்கு இலங்கின மின்னி,
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே.

பாடியவர்: பிரான் சாத்தனார்
திணை: குறிஞ்சி

பொருள்:

புதுப்புனலில் நீராடி வருகிறோம் என்று சொன்னால் தாய் விடுவாளா – என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இவள் தாயின் கட்டுக்காவலில் இருக்கிறாள் என்பதை மறைந்திருக்கும் தலைவன் உணர்ந்துகொள்ள வேண்டுமாம். தொடு
ஆயத்தாரோடு ஓரை விளையாடாமல் இல்லத்திலேயே முடங்கிக் கிடத்தல் அறநெறி ஆகாது விளையாடாமல் இருந்தால் உடல்-வலிமை ஆக்கமும் குன்றும். அதனால் புதுவெள்ளம் நுரை பொங்கி, மலர்களை அடித்துக்கொண்டு வருகிறது. அதில் நீராடி வருகிறோம் – என்று வணங்கி, அடம்பிடித்துக் கேட்டால் மட்டும் தாய் வெளியில் செல்ல விட்டுவிடுவாளா என்ன? – என்கிறாள் தோழி. நேற்று நள்ளிரவில் வானம் இருண்டு, மின்னி, இடித்து பெருமிதத்துடன் மலைமீது மழை பொழிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *