• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா

கமுதி அருகே செங்கப்படை அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியின் முதல்வர், முனைவர் தர்மர், தமிழ் பேராசிரியை முனைவர் மணிமேகலை மற்றும் கல்லூரியின் முதன்மை கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழாசிரியர் ரமேஷ் இலக்கிய மன்றத்தின் சிறப்பு குறித்தும் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார். விழாவில் மாணவர்களின் பேச்சு, கவிதை மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றது. விழா நிறைவில் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பிரபு நன்றி கூறினார். இந்த விழாவில், பள்ளியின் ஆசிரியர்கள் சரண்யா, ஜான்சிராணி , பிரமிளா மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.