பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கை.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சியானது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வையாபுரி தலைமையில் நடைபெற்றது.

முதுகலை ஆசிரியர் ராமர் வரவேற்புரையாற்றியதை தொடர்ந்து வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் மோகன், செம்மொழியின் (தமிழ்) சிறப்பு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் தமிழ் மொழியின் பெருமை குறித்தும் தமிழ் கூடல் நிகழ்வின் சிறப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து, தமிழ் மொழி தொன்மையான மூத்த மொழி ஆகும். எனவே வாழ்க்கையின் மாற்றத்திற்கு இதுபோன்ற அடிப்படை நூல்களை மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் தனராசு, பள்ளியின் முதுகலை ஆசிரியர் சுரேஷ், பட்டதாரி ஆசிரியர் சரவணன், ராஜா, மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை
வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியின் இறுதியாக பட்டதாரி தமிழ் ஆசிரியை அன்பழகி நன்றி உரையாற்றினார்.





