• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ் நூல்கள் ஜெர்மனியில் அதிக அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் டாக்டர் கே. சுபாஷினி

ByAlaguraja Palanichamy

Jan 13, 2023

தமிழ் நூல்கள் ஜெர்மனியில் அதிக அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு அயலகத் தமிழர் தினவிழாவில் பங்கேற்ற ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் கே. சுபாஷினி கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு ஜன. 11 மற்றும் 12 ஜனவரி 2023-ம் தேதிகளில் அயலக தமிழர்தினம் அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பே ஏற்று சாதனை அயலகத் தமிழர்களாக வருகை புரிந்த டாக்டர் கே. சுபாஷினி ஜெர்மனியில் இருந்து வருகை புரிந்தார். தமிழ் மரபு பண்பாட்டு அறக்கட்டளை அமைப்பின் ஆய்வு நிறுவனத்தின் தலைவராக டாக்டர் கே. சுபாஷினி உள்ளார். அயலக தமிழர் தினத்தில் பங்கேற்பதில் மிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் கூறும் போது ..தமிழகத்திலிருந்து தமிழக நூல்கள் அதிக அளவில் ஜெர்மனிக்கு வருவதில்லை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழ் நூல்கள் அதிக அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார். தமிழகத்தின் பெருமைகள் உள்ளிட்ட பல கருத்துக்களை பேசினார்.


பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
நமது அரசியல் டூடே, கெளவ ஆசிரியர்