• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஜய் படத்தை யூடியுபில்பின்னுக்குத் தள்ளிய தமன்னாவின் கவர்ச்சி ஆட்டம்

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்க்ஷன் படம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆனது.அதே நாளில், நடிகர் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாவதாக இருந்தது.


கடைசி நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனைகாரணமாக பட ரிலீஸ் தள்ளிப் போனது. இதனால் ஆக்க்ஷன் படம் தனியாக வெளியானது ஆனால், படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்த காரணத்தால் படம் தோல்வியை தழுவியது அதே படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடைக்கு நிகரான இறுக்கமான உடையில் கவர்ச்சியில் தாராளம் கட்டியிருப்பார்.ஆனால், அது தமிழில் படம் வெற்றி பெற உதவவில்லை. ஆனால், இந்தியில் டப் செய்யப்பட்ட படத்தின் வெற்றிக்கு உதவியுள்ளது. இந்த படத்திற்குயூ டியூபில் 180+ மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளதுநடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தின் இந்தி டப்பிங் பதிப்பு மூன்று ஆண்டுகளில் 190+ மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. ஆனால், ஆக்க்ஷன் திரைப்படம் ஒரே வருடத்தில் 180+ மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியாகி இந்தியில் டப்பாகி வெளியான படங்களில் ஆக்க்ஷன் திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.