• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

டாஸ்மார்க் ஊழியர்களை நிரந்தரம் செய்ய பேச்சு வார்த்தை… அமைச்சர் முத்துச்சாமி தகவல்!

ByS.Gobinath

Nov 4, 2023

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அரசு நிதி இரண்டரை கோடி, பொதுமக்கள் பங்களிப்பு இரண்டரை கோடி என மொத்தம் ஐந்து கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமான உள் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துச்சாமி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் காந்தி குமார் பாடி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது., தமிழகத்தில் டாஸ்மாஸ்க் பணியாளர்களை நிரந்தரம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, விரைவில் தீர்வு கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த தமிழகத்தில் டாஸ்மாஸ்க் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டாலும் மது அருந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது  குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விளம்பரங்கள் மூலமாகவும், அரசு மதுபான கடைகளுக்கு மது அருந்து வரும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் மற்றும் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

 மது அருந்த வரும் மது பிரியர்களை கடையில் பணி செய்யும் ஊழியர்கள் அறிவுரைகள் கூறி திருத்தினால் அந்த கடை ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.