• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

திருநள்ளாறு நளத்தீர்த்தத்தில் ஆடைகளை விடுவது அவமரியாதை செய்யும் செயல்..,

ByM.I.MOHAMMED FAROOK

Feb 24, 2026

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிக்கிறார்.

ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமை தோறும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நளன் குளத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாலயத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும் சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு வீதிகளில் கூடி நளன் குளத்தில் நீராடி சனிபகவானை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

வரும் மார்ச் 6-ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்நிலையில் தருமபுர 27 ஆவது ஆதினம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் “திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த கோவிலில் அர்ச்சனை செய்யப்படும் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் இது தவறான செயல் எனவும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வதே நலன் அளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அதுபோல நளத்திருத்தத்தில் துணிகளை விடுவது அந்த தீர்த்தத்தையே அவமதிக்கும் செயல் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது நடைபெற உள்ள சனி பெயர்ச்சியானது ஆறு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் சந்திக்க கூடிய நிகழ்வாக உள்ளதாகவும் இதனால் ஏற்படும் கெட்ட விளைவுகளை தடுப்பதற்காக பல்வேறு ஹோமங்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.