• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுடுகாட்டில் தனி நபருக்கு பாதை வழங்கிய தாசில்தார்..,

ByKalamegam Viswanathan

Jun 17, 2025

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் குலமங்கலம் ஊராட்சி எழும்பூர் கிராமத்தில் தலித் கிறிஸ்தவ மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டில் தனி நபருக்கு பாதை வழங்கிய தாசில்தார்.

சுடுகாட்டில் அமைக்கப்பட்ட கதவினை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுரை வடக்கு வட்டாசியர் மஸ்தான் கனி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற 20 பெண்கள் உள்பட 50 பேர் சுடுகாட்டு கதவை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டம்

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலமங்கலம் கிராமம் எழும்பூர் கிராமத்தில் தலித் கிறிஸ்தவ மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாடு உள்ளது.

பல தலைமுறைகளாக பயன்பட்டு வந்த சுடுகாட்டில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளே நுழையாத வண்ணம் இரும்பு கேட் அமைத்தனர்.

இதனை இப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் தங்களுக்கு பாதை வேண்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மதுரை வடக்கு வட்டாட்சியரிடம் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

தலித் கிறிஸ்தவ மக்கள் சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு நடைபெறாதவகையில் தான் இரும்பு கேட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அகற்ற வேண்டாம் என வட்டாட்சியர் மஸ்தான் கனியிடம் கூடினர். எழும்பூர் கிராம பொது மக்களின் கோரிக்கையை ஏற்காமல் வட்டாட்சியர் இன்று காலை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி உடன் வந்து இரும்பு கேட்டை அகற்றினர்.

அதனைத் தொடர்ந்து தலித் கிறிஸ்தவ அமைப்பின் பிளவேந்திரன் , செயலாளர் ஜெயக்குமார், மற்றும் அந்தோனியார் ஆலய குழு கிராம பொதுமக்களுக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சுடுகாட்டு பாதையில் அமர்ந்து கதவினை அகற்ற எதிர்ப்பினை தெரிவித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பை மீறி வருவாய்த்துறையினர் ஜேசிபி எந்திரம் மூலம் சுடுகாட்டில் அமைக்கப்பட்ட இரும்பு கதவுகனை அகற்றினர். தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.