விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மத்திய மாவட்ட கழக செயலாளர் சின்னப்பர் தலைமை தாங்கி கண்டன கோஷங்கள் எழுப்பினார்.

மத்திய அரசானது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கு பொதுவான அரசாக செயல்பட வேண்டும். ஆனால் தற்போதுள்ள பிஜேபி அரசு சிறுபான்மையினர் மத்தியில் பீதியை உருவாக்கும் வகையிலும் அனைத்து மதத்தினருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் வெம்பக்கோட்டை அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.