• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கேரள ரசிகர்களால் சுற்றி வளைக்கப்பட்ட சூர்யா -ஜோதிகா

ByA.Tamilselvan

Nov 11, 2022

நடிகர் சூர்யா- ஜோதிகா கேரள சென்ற போது அவரது காரை ரசிகர்கள் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களோட செல்பி எடுத்து இருவரும் மகிழ்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம், மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான், மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்றுப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில், தற்போது கேரளாவிற்கு திடீர் விசிட் அடித்துள்ள நடிகர் சூர்யா,மம்முட்டி – ஜோதிகா இணைந்து நடித்து வரும் காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளாவிலும் ரசிகர்களை பெற்றுள்ள சூர்யா அங்கு ரசிகர்களை சந்தித்து பேசியுள்ளார்.இதனிடையே திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர் சூர்யாவை வரவேற்ற நடிகர் மம்முட்டி அவருக்கும் ஜோதிகாவுக்கும் பிரியாணி விருந்து வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தறபோது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதேபோல கேரளாவில் சூர்யா அவரின் மனைவி ஜோதிகாவுடன் காரில் சென்றபோது ரசிகர்கள் சுற்றிவளைத்துள்ளனர். அப்போது அவர்களுடன் சூர்யா செல்பி எடுத்துகொண்டுள்ளார்.