பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு ஜாமின் மனு விசாரணையை 2 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில் சென்னை புழல் சிறையில் சிவசங்கர் பாபா அடைக்கப்பட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஜாமின் கோரியிருந்தார்.