• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டில்லியில் பைக் – டாக்சிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை..!

Byவிஷா

Jun 13, 2023

டில்லி அரசு ரேபிடோ, உபேர் பைக் டாக்சிகளை அரசு புதிய கொள்கை வகிக்கும் வரை இயங்க தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தடைவிதிக்கக் கூடாது என அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து டில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது டில்லி அரசின் முத்த வழக்கறிஞர் மனிஷ் வஷிஷ் வரும் ஜூலைக்குள் அரசின் கொள்கை திட்டம் தயாராகி விடும் என்பதால் இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுப்பதாகத் தெரிவித்தார். உபேர் நிறுவன வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், “மத்திய அரசு ஏற்கனவே மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ளது. ஆனால் டில்லி அரசு அதை இன்னும் உருவாக்காமல் உள்ளது” என அரசு மீது குற்றம் சாட்டினார்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், “சாலையில் வாகனங்கள் அரசின் உரிமம் இல்லாமல் இயங்க முடியாது. டில்லியில் ரேபிடோ உபேர் நிறுவன பைக் டாக்சிகள் இயங்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இதற்கு அனுமதி அளித்த டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவு இட்டுள்ளது.