• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் மோகன் (வயது 60) இன்று காலமானார்…

ByKalamegam Viswanathan

Aug 2, 2023
கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்தவர் சின்னு. இவரது இளைய மகன் மோகன் (வயது 60) திருமணமாகதவர். திரைப்படங்களில் துணை நடிகரா கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறந்த மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் பிச்சை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடந்த தகவலையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீஸார் இறந்த மோகனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மோகனுக்கு 2 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ளனர். இறந்த மோகனுடைய உடலை இலவச ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.