தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவடைய உள்ள நிலையில், அவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி நாளில் இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கவுள்ளன. இந்த தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல், கடந்த மார்ச் 5ஆம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், அவர்களுக்கு வரும் 27ஆம் தேதியுடன் தேர்வு முடிகிறது. இதைத்தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதலே கோடை விடுமுறை தொடங்குகிறது. அதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் பொதுத்தேர்வு முடிவதால், அவர்களுக்கு வரும் 28ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாட, இப்போதே மாணவர்கள் வெளியூர் பயணத் திட்டத்தை போட்டு வைத்துள்ளனர்.