• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மே 1 முதல் சிறுவர்களுக்கான கோடை முகாம்..!

Byவிஷா

Apr 28, 2023

பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் இஸ்கான் சார்பில் சிறுவர்களுக்கான கோடை முகாம் மே 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
சென்னை இஸ்கான் சிறுவர்கள் மற்றும் இளம் பருவ மாணவர்களுக்கான நிகழ்நிலை மற்றும் அகல் நிலை கோடை முகாம் நடைபெறுகிறது. இதில் அதிதி சேவை எனும் கருப்பொருளில் சிறுவர்களுக்கு கதைகள், புதிர்கள், நெருப்பில்லாமல் சமையல், கைவினை பயிற்சிகள், பஜனைகள் மற்றும் ஓவியம் வரைதல் ஆகியவை கற்பிக்கப்படும். 13 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட இளம் மாணவர்களுக்கான கலந்தாய்வு, ஒரு நிமிட பேச்சு ஆகியவையும் நடத்தப்படும்.
இதனை மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் கற்றுக் கொள்ளலாம். இந்த பயிற்சி முகாம் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை முதல் குழுவுக்கும் அதன் பிறகு மே 15 முதல் 26 ஆம் தேதி வரை இரண்டாம் குழுவுக்கும் நடைபெறும். குழந்தைகளின் நேர வசதிப்படி தினமும் ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் நடைபெறும் எனவும் பாடத்திட்டங்கள் அனைத்தும் மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸப் மூலமாக பகிரப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய 9444708680 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.