• Sat. Apr 27th, 2024

சுமித் அண்டில் சாதனை;நாட்டிற்கு பெருமை – மோடி

சுமித் அண்டில் சாதனை;நாட்டிற்கு பெருமை
பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித்,பாராலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதனால்,டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் சுமித் அண்டில் தங்கம் பதக்கம் வென்றார். ஏற்கனவே, மகளிர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று நிலையில், தற்போது இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இதுவரை இந்தியா 8 பதக்கங்களை வென்றுள்ளது.
இதனையடுத்து,இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் பெற்றுக் கொடுத்த சுமித் அண்டிலை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில்,பிரதமர் மோடி அவர்கள்,எங்கள் விளையாட்டு வீரர்கள் பாராலிம்பிக்கில் தொடர்ந்து பிரகாசிக்கிறார்கள் என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “எங்கள் விளையாட்டு வீரர்கள் பாராலிம்பிக்கில் தொடர்ந்து பிரகாசிக்கிறார்கள்! பாராலிம்பிக்கில் சுமித் அண்டில் சாதனை படைத்ததற்காக நாடு பெருமை கொள்கிறது.
மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்றதற்கு சுமித்க்கு வாழ்த்துக்கள். எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *