• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காதலர் தின ஸ்பெஷலாக சுஜா வருணியின் ஆட்டம்

Byகாயத்ரி

Feb 16, 2022

தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு சிறப்பு நடனமாடி பிரபலமானவர் நடிகை சுஜாவருணி. இவர் துணை நடிகையாகவும் நடித்து வருகின்றார். இவர் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-1 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்றிருந்தார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டிலும் பங்கேற்று சென்ற வாரம் வெளியேறினார். இதன் வாயிலாக ரசிகர்களிடையே பிரபலமான சுஜாவாருணி. தற்போது இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் 2019ஆம் வருடம் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் சிவாஜியின் முதல்மகன் ராம்குமாரின் மகனான சிவாஜி தேவ்வை காதலித்து மணந்து கொண்டார். சுஜாவாருணியை விட சிவாஜி தேவ் ஐந்து வயது சிறியவர். பலமுறை இவரின் அற்புதமான காதல் பற்றி தெரிவித்திருக்கிறார்.சுஜா வருணி பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு தன் கணவருடன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற குத்துப்பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.