• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சர்க்கரை துறை ஆணையரின் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் வரவேற்பு

தமிழக அரசின் சர்க்கரை துறை ஆணையர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளை சக்தி சர்க்கரை ஆலையுடன் இணைத்ததற்கு அரச்சலூர் மொடக்குறிச்சி கொடுமுடி மற்றும் சிவகிரி பகுதி கரும்பு விவசாய சங்கம் வரவேற்றுள்ளது.
சங்கத்தின் செயலாளர் தங்கராஜ் துணைத்தலைவர் பி லட்சுமணன் செய்தியாளிடம் கூறியதாவது அரச்சலூர் பகுதியில் உள்ள ஒன்பது கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் ஏற்கனவே புகலூர் பாரிசர்க்கரை ஆலையில் கரும்பு பதிவு செய்திருந்தனர். கரும்பு பன்னிரண்டு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும் ஆனால் அந்தஆலை 18 மாதங்கள் ஆகியும் கரும்பு அறுவடை செய்வதில்லை. இதனால் அந்த ஆலையின்கீழ் கரும்பு பதிவு செய்திருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இங்கிருந்து கரும்பை 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புகலூர் ஆலைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு பதில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப வேண்டுகோள் விடுத்தனர். சக்தி சர்க்கரை ஆலை கடந்த காலத்தில் நிதி நெருக்கடியில் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக எந்த பிரச்சினையும் இல்லை எனவே அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சக்தி சர்க்கரை ஆலை பதிவு செய்ய விருப்பம் தெரிவித்ததின் அடிப்படையில் சர்க்கரைத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதை நாங்கள் வரவேற்கிறோம் ஆணையருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அரச்சலூர் பகுதி சட்டரீதியாகஅங்குள்ள சக்தி சர்க்கரை ஆலை கரும்பு பதிவுக்கு வரையறுக்கப்பட்ட பகுதியாகும். ஆனால் புகலூர் சர்க்கரை ஆலை வழக்கு தொடர்ந்ததால் இவ்வளவு நாட்கள் வழக்கு நிலுவையில் இருந்தது தற்போது நீதிமன்ற உத்தரவு மற்றும் சர்க்கரை துறை அணையரின் செயல்முறை ஆணையால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதனால் அரச்சலூர் பகுதி கரும்பு விவசாயிகள் சக்தி சர்க்கரை ஆலை உடன் இணைவதில் மகிழ்ச்சி கொள்கின்றனர். ஆனால் சிலர் எதிர்கின்றனர் அவர்கள் எதிர்ப்பு நியாயமற்றது. இது சம்பந்தமாக முதல்வர் கலெக்டர் மற்றும் ஆணையருக்கு கடிதங்கள் அனுப்புவோம். மேலும் விவசாயிகள் விரும்பினால் அவர்கள் விரும்பும் ஆலைகளுக்கு கரும்பு வழங்க அரசு பரிசீவிக்கலாம் இவ்வாறு அவர்கள் கூறினர்.