சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளான இன்று பெரம்பலூர் பல்வேறு பகுதிகளில் வாழ்த்து பேனர் மற்றும் போஸ்டர்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு ரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து பேனர் மற்றும் போஸ்டர்களை பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் அகற்றியதாக கூறப்பட்டு, பெரம்பலூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ரத்தினவேல் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காவல்துறையை கண்டித்து, புதிய பேருந்து நிலையத்தில் திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போக்குவரத்து அரை மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாநில நிர்வாக வீர செங்கோலன் மன்னர் மன்னன் தமிழ் மாணிக்கம் கிருஷ்ணகுமார் தங்க சண்முகசுந்தரம் தென்றல் சரண்ராஜ் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.