தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் கத்திரிக்கொல்லைச்சாவடியில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






