விருதுநகர் மேலத்தெருவில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தே அறிந்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி உத்தரவின்படி விருதுநகர் அதிமுக நிர்வாகிகள் பாதிக்கபட்ட 22 குடுப்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 வீதம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.


விருதுநகர் நகரத்தில் உள்ள 22 வது வார்டு பெருமாள் கோயில் தெரு மூணாம் நம்பர் பால் டிப்போ பகுதியில் சுமார் 24 வீடு தீப்பிடித்து எரிந்த தகவலை அறிந்து அதிமுக மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார் மாநில பொறுப்பாளர் முன்னாள் மலை வரதராஜன் விருதுநகர் நகர செயலாளர் டிபிஎஸ் வெங்கடேஷ், முன்னாள் நகர செயலாளர் முகமது நயினார் ,நான்கு ஒன்றிய செயலார்கள் கலைவானன், மச்சராச,கண்ணன், தர்மலிங்கம்,நகர அவைத்தலைவர் ஜெயசங்கர்,22வது வார்டு கிளை செயலார் பாசறை சரவணன், நகர மன்ற உறுப்பினர் சரவணன் ,எம் ஜி ஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன், பாசறை செயலாளர் மாரிகனி மற்றும் கழக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உத்தரவின் பெயரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான பாத்திரங்கள் சேலை, வேஷ்டி, துண்டு, பாய் மற்றும் 5000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.

உதவிகள் பெற்ற அப்பகுதி மக்கள் அதிமுகவிற்கு நன்றிகள் தெரிவித்து வருகின்றனர்கள்.