• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தாலுகா அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!

ByKalamegam Viswanathan

Aug 3, 2023

திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் பழைய நுழைவு வாயில் தற்போது பயன்படுத்தப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இந்த பூட்டப்பட்ட நுழைவு வாயில் அருகில் போடப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் காய்ந்த புற்கள், செடிகளில் நேற்று இரவு 9 மணிக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர். இதனால் தீ கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்தது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அருகிலும் பரவத் தொடங்கியது.

இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் இரவு பணியில் இருந்த அலுவலர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சிறிது நேரம் கவனிக்காமல் விட்டிருந்தால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள், டிரான்ஸ்பார்மர் போன்றவற்றிலும் தீ பரவி இருக்கும். தாலுகா அலுவலக ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. தாலுகா அலுவலக வளாகத்தை டாக்ஸி ஸ்டாண்டு போல் இரவு நேரத்தில் கார்களை நிறுத்தி வைப்பதை தடுப்பதற்கு தாசில்தார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.