• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு இப்படி ஒரு ஆசையா?

தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக இருந்தவர் விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதா. வண்டி சக்கரம் என்ற படத்தில் நடிக்க தொடங்கிய இவர் பின் கவர்ச்சி ராணியாக வலம் வந்தார்.


இவர் இருந்தால் தான் படம் வெற்றிபெறும் என்ற அளவிற்கு வளர்ந்தார், அதே வேகத்தில் ஹிந்தி படங்களில் எல்லாம் நடித்து வந்தார். ஆனால் எவ்வளவு வேகமாக வளர்ந்தாரே அதே வேகத்தில் சினிமா துறையில் சிலரால் பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்பட்டார்.

ஏழ்மையில் வாழ்ந்து வந்த சில்க் ஸ்மிதா சென்னை வந்து நடிகைகளுக்கு மேக்கப் போடும் பெண்ணாக பணியாற்றி வந்தார்.


பின் வினு சக்ரவர்த்தி சில்க் ஸ்மிதாவை வண்டிகாரன் என்ற படத்தில் நாயகியாக நடிக்க வைத்தார். நடிகையாக உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதாவிற்கு உண்மையில் நக்சலைட் ஆக வேண்டும் என்பது ஆசையாம். இதனை ஒரு பேட்டியில் அவரே கூறியிருக்கிறார்.