உக்ரைனில் நடைபெற்றுவரும் போர் காரணமாக அங்கு படிப்பைதொடர முடியாத மாணவர்களை இந்தியாவில் படிப்பை தொடர அனுமதிக்க முடியாது என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடர முடியாது என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும். இந்திய பல்கலைக் கழகங்களில் படிப்பை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை என தெரிவித்தது.
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர முடியாது- ஒன்றிய அரசு தகவல்
