சென்னை பல்லாவரம் செயின்ட் செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி 2,821 மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து மனித வடிவில் நின்று அசத்தினர். இதனை வெறும் 1 நிமிடம் 20 வினாடிகளில் இச்சாதனை நிகழ்வை நிகழ்த்தியது.

இந்த சாதனையை ஐன்ஸ்டின் உலகசாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
உலகை உருவமைக்கும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உண்டு என்பதை வலியுறுத்தி “நலனை நோக்கிய முன்னேற்ற நடைக்கு கல்வியே அடிப்படை” என்னும் நோக்கை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கையில் லாந்தர் விளக்கை தூக்கி உலகிற்கு அறிவு ஒளியை பரப்பும் அசையும் தாய்மையின் நிழல் உருவம் மற்றொரு கையில் புத்தகத்தைத் ஏந்தி கல்வியின் சிறப்பையும், பெண் முன்னேற்றத்தின் அவசியத்தையும் உலகறியச் செய்கிறது.

ஞான ஒளியும் நூல் அறிவும் சேர்ந்தால்தான் மனித வாழ்வு உயர்வடையும் என்பதை இச்சாதனை நிகழ்ச்சி நினைவுறுத்துகிறது. இது வெறும் சாதனை மட்டுமல்ல இப்பள்ளியின் பெருமையும் ஆகும். இப்பள்ளி எதிர்காலத் தலைமுறையாகிய மாணவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக விளங்குகிறது.
ஒளிரும் அறிவால் உயரும் இப்பள்ளி இன்று உலகச் சாதனை பட்டியலில் இடம் பிடித்து புது சரித்திரம் படைத்துள்ளது.