ரத்தன் டாடா மறைவுக்கு சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி மாணவ, மாணவிகள் இரங்கல் தெரிவித்தனர்.

டாடா குழுமத்தையும், நம் நாட்டின் அடிப்படை அமைப்பையும் வடிவமைத்த அசாதாரணமான தலைவரான ரத்தன் நவல் டாடா நம்மை விட்டு விடைபெறுவது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இவருடைய மறைவு பெரும் இழப்பாகும். அவருடைய நேர்மை மற்றும் புதுமைக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு, அவரது தலைமையின் கீழ் டாடா குழுமம் உலகளாவில் வர்த்தக துறையில் பெரும் சாதனையை படைத்தது. அதே நேரத்தில் வர்த்தக துறையில் எப்போதும் நெறிமுறையுடன் உண்மையாக இருந்தது. ரத்தன் டாடாவின் தொண்டு மற்றும் சமூக மேம்பாடுக்கான அர்ப்பணிப்பு பலகோடி மக்களின் வாழ்க்கையை தொட்டுள்ளது. கல்வி முதல் சுகாதாரம் வரை, அவரது முயற்சிகள் பல தலைமுறைகளுக்கு பயனளிக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அன்னாரது ஆன்மா இறையடியில் இளைப்பாற சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவ, மாணவிகள் ரதன் டாடாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
