ஐஓஎஸ் தளத்தில் செயல்படும் வகையில், சென்னை பஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, பேருந்துகள் வரும் நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் உள்ளிட்டவற்றை செல்போனில் அறிந்து கொள்ளும் வகையில் ‘சென்னை பஸ்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஆண்டிராய்டு செல்போனில் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இச்செயலியை ஆப்பிள் நிறுவன செல்போன்களில் பயன்படுத்துவதற்கேற்ப ஐஓஎஸ்தளத்தில் செயல்படுத்த வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐஓஎஸ் தளத்தில் இயங்கும் வகையிலான ‘சென்னை பஸ்’ செயலியை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
ஐஓஎஸ் தளத்தில் சென்னை பஸ் செயலி அறிமுகம்
