• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பேருந்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு

ஓடும் பேருந்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சினிகிரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவ்யாஸ்ரீ. அவர் கெலமங்கலம் பகுதியில் மேல்நிலை பள்ளியில் பயின்று வருகிறார்.

பள்ளிக்கு பேருந்தில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சம்பவதன்று, பள்ளியில் இருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் சினிகிரிப்பள்ளி வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் நிற்காமல் பல மீட்டர் தூரம் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், அந்த மாணவி பேருந்தில் இருந்து குதித்துள்ளார்.

பேருந்தின் பின் பக்க டயர் அவரின் மீது ஏறி சென்றது. உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்து நிற்காமல் சென்றதால் தான் இந்த விபத்தில் மாணவி உயிரிழந்துள்ளதாக பெற்றோரும் உறவினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.