• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கலுக்கு கருப்பு கொடியுடன் மாலை அணிவித்து 5-வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவர் காங்கிரஸார்

ByN.Ravi

Feb 28, 2024

“கோபேக் மோடி ” கோஷத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலுக்கு 5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்திய மாணவ காங்கிரஸார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடியால் 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
பின்னர், ஜப்பானின் ஜெயிக்கா நிறுவனத்துடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கூறிவந்த நிலையில், ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் தற்போது வரை கட்டிடங்கள் எழுப்பப்படவில்லை. இந்நிலையில், மதுரை வரும் மோடியை கண்டித்து மாணவர் காங்கிரஸ் சார்பில், மதுரை மாவட்டத் தலைவர் வினோத் ,மாவட்ட செயலாளர் சுரேஷ் மாநில பொதுச்செயலாளர் விஜய தீபன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை வளாக பகுதியில் செங்கல் ஒன்றிற்கு மாலை
யணிவித்து ,5-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவ மனை வர தாமத்தினால், மோடியே திரும்பி போ “கோ பேக் ” மோடி என கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, ஆஸ்டின் பட்டி போலீஸார் விரைந்து வந்து கருப்பு கொடி காட்டிய மாணவர் காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.