• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

ராணுவ ஆட்சியை எதிர்த்து சூடானில் போராட்டம்..

சூடானில் தலைநகர் கார்டோமில் அதிபர் மாளிகையை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்துள்ளனர்.கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சூடானில் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது.


அதன் பின்னர் சூடான் மக்கள் 12 மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினர்.இதில் 54 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு சிவில் அரசியல் சக்திகளுடன் அதிகார பகிர்வு ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராணுவம், இடைக்கால அரசாங்க தலைவர் உமரல் பஷீரை தூக்கி எரிந்தது.

நவம்பர் மாதம் அப்தல்லா ஹம்டோக் மீண்டும் பிரதமராக பதவியேற்ற பிறகு, ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. கடந்த டிசம்பர் 19ம் தேதி எதிர்ப்பு போராட்டங்களின் போது 13 பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளன. போராட்டங்கள் வலுத்து வந்த நிலையில், இடைக்கால பிரதமர் அப்தல்லா ஹம்டோக் நேற்று ராஜினாமா செய்தார்.

தாம் பதவியேற்ற 6 வாரங்களுக்குள் அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவும் கூட்டாக ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில் பெண்களை ஆர்ப்பாட்டங்களில் இருந்து விரட்டுவதற்கும் அவர்களின் குரல்களை அமைதிப்படுத்துவதற்கும் ஓர் ஆயுதமாக பாலியல் வன்முறையை சூடான் ராணுவம் பயன்படுத்துவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.