மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி பொம்மன் பட்டி கிராமத்தில் திமுக சார்பில் டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

பொம்மன்பட்டி மற்றும் அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் வாங்குவதற்காக காத்திருந்த நிலையில்
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எம்எல்ஏ வராததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் இதனை அடுத்து அங்கு வந்த வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் பேரூர் நிர்வாகி பிரகாஷ் மற்றும் துணைச் செயலாளர் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அப்போது அனைவருக்கும் டிபன் பாக்ஸ் உள்ளது டிபன் பாக்ஸ் வழங்கும் நேரத்தில் முண்டியடித்து யாரும் முன்னாள் வர வேண்டாம் அனைவருக்கும் வழங்கி விட்டு தான் சட்டமன்ற உறுப்பினர் செல்வார் என கூறினர் அதனைத் தொடர்ந்து வெங்கடேசன் எம் எல் ஏ டிபன் பாக்ஸ் வழங்க ஆரம்பித்தபோது சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்து டிபன் பாக்ஸ் வாங்க சென்றனர்.

இந்த நிலையில் பொம்மன் பட்டி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் ஸ்டீபன் ராஜ் என்பவர் டிபன் பாக்ஸ் வாங்குவதற்காக கூட்டத்தில் புகுந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது அதில் தர்மராஜ் மகன் ஸ்டீபன் ராஜ் என்பவரின் மூக்கில் குத்தியதாக கூறப்படுகிறது இதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டு சொட்ட வடிந்தது உடனே ரத்த காயத்துடன் கூட்டத்திலிருந்து வெளியே வந்து மருத்துவமனைக்கு செல்வதற்காக அவரது ஆதரவாளர்களை அழைத்தார்.
உடனே அருகில் வந்த அவருடைய ஆதரவு மற்றும் உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து சென்று ரத்தம் வடிவதை நிறுத்தி மறுபடியும் நியாயம் கேட்பதற்காக வெங்கடேசன் எம்எல்ஏவிடம் அழைத்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் இந்த சம்பவம் எதுவும் தெரியாத வகையில் திமுக எம்எல்ஏவான வெங்கடேசன் டிபன் பாக்ஸ்களை வழங்கி கொண்டிருந்தது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி ஓரிரு நாளில் நிறைவடையக்கூடிய நிலையில் பல்வேறு கிராமங்களில் டிபன் பாக்ஸ் வழங்கப்படாமல் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்திற்கு நேரில் செல்லாமல் அங்குள்ள கிராம மக்களை பொம்மன் பட்டி கிராமத்திற்கு வரவழைத்து ஒரே இடத்தில் வைத்து இரண்டு கிராமத்தினருக்கு டிபன் பாக்ஸ் வழங்கியதால் திமுகவின் இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக அங்கிருந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மேலும் டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சியை முடித்த பின்பு தகராறு நடந்த சம்பவம் எதுவும் தெரியாதது போல் அங்கு வந்த திமுக எம்எல்ஏவான வெங்கடேசன் அங்கிருந்த காவல்துறையினரிடம் யாரிடமும் புகார் வாங்க வேண்டாம் வழக்கும் பதிய வேண்டாம் என கூறி சென்றதாக அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் கூறினார்கள்.
திமுகவின் டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சியில் கைகலப்பாகி அடிதடியில் முடிந்து ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சமாதானப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து கிளம்பி சென்ற சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ வுக்கு பொம்மன் பட்டி மற்றும் அம்மச்சியாபுரம் பொதுமக்கள் தங்களது கடும் எதிர்ப்புகளை தெரிவித்து இருப்பதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
உள்ளூர் நிர்வாகிகள் முறையாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தும் தாமதமாக எம்எல்ஏ வந்ததால் டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சியில் குளறுபடிகள் ஏற்பட்டு கைகலப்பாகி ஒருவருக்கு இரத்தக் காயம் ஏற்பட்டதாகவும் தொடர்ச்சியாக இதே போன்று எம்எல்ஏ திட்டமிட்டு இது போன்.ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
டிபன் பாக்ஸ் வழங்குவதில் ஆரம்பம் முதல் குளறுபடிகள் இருந்த நிலையில் ஆளு கட்சியை சேர்ந்த திமுக உறுப்பினர்களுக்கு பல இடங்களில் டிபன் பாக்ஸ் வழங்கப்படாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கூறுகின்றனர்.
ஆகையால் விடுபட்ட பகுதிகளில் மீண்டும் டிபன் பாக்ஸ்களை வழங்க சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோழவந்தான் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




