இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது தென்னிந்திய கவுன்சில் கூட்டம் புதுச்சேரி தனியார் உணவகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பங்கேற்று, புதுச்சேரி தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த தொழில் முனைவோருடன் கலந்துரையாடினார்.

கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன்…
புதுச்சேரியில் தொழில் தொடங்க ஏற்ற வலுவான சூழல் இருப்பதால் புதிய தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதி விரைவாக வழங்கப்படும். மாநில வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் விமான சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. தொழில்பேட்டைகளில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், புதிய தொழில்கள் தொடங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை தர முடியும். அது நாட்டின் சமுதாயப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டார்.





