பழைய பல்லாவரத்தில் கீழ்கட்டளை பகுதிகழக அதிமுக சார்பில் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பழைய பல்லாவரத்தில் கீழ்கட்டளை பகுதி அதிமுக சார்பில் திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை விளக்கி தெருமுனை கூட்டம் 17 வது வார்டு கிளை வட்ட கழக செயலாளர் இராமநாதன் தலைமையில் கீழ்கட்டளை பகுதிகழக செயலாளர் சந்திரசேகர ராஜா ஏற்பாட்டில் கச்சேரிமலை அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன், மேற்கு மாவட்ட துனை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ப.தன்சிங், தலைமை கழக பேச்சாளர் இராஜகோபால், பல்லாவரம் பகுதிகழக செயலாளர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டு திமுக ஆட்சியில் நடைபெறும்.

கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பினமை, இளைஞர்களை சீரழிக்கும் போதைபொருள் கலாச்சாரம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து சிறப்புரையாற்றினர். தெருமுனை கூட்டதை அதிமுக நிர்வாகிகள் சரத்லோகநாதன், சிவமூர்த்தி, விஜயன், ரஜினி ஆகியோர் சிறப்பாக அமைத்தனர்.
இதில் முன்னாள் நகரமன்ற தலைவர் அனகை பி.வேலாயுதம் மற்றும் கீழ்கட்டளை பகுதி கழக நிர்வாகிகள், மகளிரணி உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.