அண்மையில் தெரு நாய்கள் தொல்லை நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்து சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில். மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தெருவில் சுற்றி திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் என நாளுக்கு நாள் நாய் கடிக்கு ஆளாகி அவதிப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதனிடையே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் நாய்கள் தொல்லை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயச்சந்திரன் மதுரை வள்ளலார் உதவும் கரங்கள் என்கிற தொண்டு அமைப்பை வைத்து நாய் பூனைகளை தத்தெடுத்து பராமரித்து வருகிறார். தேவைப்படுபவர்களுக்கு அவற்றை தத்து கொடுக்கும் சேவையினையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி அவர் அமைப்போடு கைகோர்த்து மதுரை மாநகராட்சி சார்பில் மதுரை தமுக்கம் மைதான பகுதியில் இரண்டு நாட்கள் இன்று மற்றும் நாளை மாலை 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரை தெரு நாய்கள் தத்தெடுக்கும் முகாமினை நடத்தி வருகிறது.

முகாமில் நல்ல உடல் நிலையோடு மருத்துவ பராமரிப்பில் இருந்த நாய்கள் வைக்கப்பட்டுள்ளது அங்கு வந்திருந்தவர்கள் தங்களுக்குப் பிடித்த நாய் களை தங்கள் வீடுகளில் வளர்ப்பதற்காக மகிழ்ச்சியோடு தத்தெடுத்து கொண்டு சென்று வருகின்றனர்.
அங்கு வந்திருந்த பெரியவர்கள் சிறியவர்கள் என வயது வரம்பு இன்றி முகாமில் வைக்கப்பட்டிருந்த தெரு நாய் குட்டிகளை ஆர்வமுடன் தொட்டுப் பார்த்ததோடு மட்டுமல்லாது அவற்றை தூக்கி மகிழ்ச்சியோடு கொஞ்சவும் செய்தனர்.
முகம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரு நாய்கள் குறித்த வளர்ப்பு முறை மற்றும் நாய்களை விலைக்கு வாங்காதீர்கள். அவற்றை தத்தெடுத்து வளருங்கள் என்றும் எடுத்துரைத்தனர். முகாமில் பலர் ஆர்வமுடன் பங்கேற்று அங்கு வைக்கப்பட்டுள்ள தெருநாய்களை தத்தெடுத்து தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
முகாமிற்கு வந்திருந்த ஒன்பது வயது சிறுவன் சல்மான் என்பவன் அங்கு வைக்கப்பட்டிருந்த மூன்று மாத நாட்டு நாட்டு நாய் குட்டி ஒன்றை தத்தெடுத்து சென்றார்.

இது குறித்து சிறுவன் சல்மான் கூறுகையில்,
நாங்க வச்சிருந்த நாய் செத்துப்போச்சு இப்ப எங்க வீட்டுல நாய் இல்ல அதனால இந்த நாயை நாங்க எங்க வீட்டுக்கு கொண்டு போறோம், இந்த நாயை நான் கொண்டு போய் நல்லா வளர்ப்பேன், இந்த நாய்க்கு ஜாக்கி னு பெயர் வைக்க போறேன், இந்த நாய்க்கு வீடு இல்லாததால் எங்க வீட்டுக்கு கொண்டு போறது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று நெகிழ்ச்சி பொங்க கூறினான்.
மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டு கவுன்சிலருமான ஜெயச்சந்திரன் பேசுகையில்,
“தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் துன்பத்தை தடுக்கும் வகையில், நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்கும் வகையிலும் இது போன்ற தத்தெடுப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆளாகிய சிறுமி, பள்ளி செல்லும் மாணவர்கள், என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கருத்தடை செய்யப்படுகிறது.
தெரு நாய்களை தத்தெடுப்பதன் மூலம் நாம் சமூகத்தை ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம்” மாநகராட்சியோடு கைகோர்த்து இந்த முகாம் ஆனது இன்று மற்றும் நாளை நடைபெறும் இங்கு வருபவர்கள் அவர்களாகவே வந்து ஆர்வமுடன் நாய்களை தத்தெடுத்து செல்கின்றனர். குறிப்பாக இந்த முகாம் நாட்டு நாய்க்குட்டிகள் இனங்களை பாதுகாப்பதற்காகவும் – நாய்கள் மீதான விழிப்புணர்வையும் பாதுகாப்புத் தன்மையும் எடுத்துரைப்பதற்காக தான் நடைபெற்று வருகிறது என்றார்.