• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சாலை ஓரங்களில் இறந்த தெருநாய்கள்.., சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்…

ByKalamegam Viswanathan

Jun 24, 2023

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் ஊராட்சியில் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வயது முதிர்வு காரணமாக இறந்த தெருநாய்களை சாலை ஓரம் உள்ள குப்பை கிடங்குகளில் விசி செல்வதால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சாலை ஓரங்களில் இறந்த தெரு நாய்கள் ஒரு வாரத்திற்கு மேல் கிடப்பதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர். ஆகையால் சுகாதாரத்துறை உடனடியாக தெருவில் இறந்து கிடக்கும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.