• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

ByA.Tamilselvan

Jun 22, 2022

ஒன்றிய அரசு அக்னிபத் என்கிற இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் பேட்டி
SDPI கட்சியின் 14 வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு ஒரு மரம் கோடி அறம் எனும் முழக்கத்துடன் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொது மக்களுக்கும்
மாநகராட்சி மக்கள் நல பணியாளர்களுக்கும் நல உதவி திட்டங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்கள்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசியமாநில தலைவர் நெல்லை முபாரக் ஒன்றிய அரசு பல மோசமான பொய்யான வாக்குறுதிகளை இன்றைக்கு மக்களிடையே கட்டவிழ்த்துவிட்டு வருகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதான ஒரு பொய்யான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்மோடி.
மோடி அரசு பொறுப்பேற்ற காலத்தில் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொன்னார். ஏறத்தாழ எட்டு ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வேலையில்லா திண்டாட்டம் இன்றைக்கு 5.5 கோடி மக்கள் இன்றைக்கு வேலை இல்லாத நிலையில் இருக்கிறார்கள். என்கிற புள்ளி விவரங்கள் இன்றைக்கு வெளியாகியிருக்கிறது .மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல இயலாத ஒன்றிய அரசு மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி அதன் மூலமாக ஆட்சி செய்ய முயற்சி செய்கிறது. இந்திய மக்களை இப்பொழுது தலைகுனிவை சந்திக்கிற ஒரு ஆபத்தான சூழலை இப்பொழுது ஒன்றிய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. எனவே ஒன்றிய அரசு தன்னுடைய நிலையை திருத்திக் கொள்ளவேண்டும்.
அக்னிபத் என்று கூறுகின்ற இந்த ஒன்றிய அரசு அறிவித்திருக்கும் இந்த திட்டமானது எஸ்டிபிஐ கட்சி ஏற்கனவே சொன்னதை போல இந்த அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை மக்களுடைய வரிப் பணத்தில் பயிற்றுவிக்க ஒரு ஆபத்தான திட்டம். இந்த திட்டத்திற்கு எந்த அவசியமும் இல்லை எல்லா ஜனநாயக சக்திகளும் வட இந்தியாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது .ஆனாலும் கூட அமீத்சா ஒரு இன்ச் கூட அவர் இறங்கி வருவதற்கு தயாராக இல்லை .மோடியும் ராஜ்நாத்சிங் ம் எப்படியாவது பசப்பு வார்த்தைகளை சொல்லி இந்த மக்களை ஏமாற்றி விடத் துடிக்கிறார்கள் .எனவே அக்னி பாத் என்கிற இந்த திட்டத்தை கைவிட வேண்டும். மற்றவருடைய உணர்வுகளுக்கு எதிராக எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது என்பதற்கான உதாரணம்தான் அவர்களுடைய இந்த திட்டம் இது ஒரு மிகப் பெரிய புரட்சியாக இது மாறிக்கொண்டிருக்கிறது எனவே ஒன்றிய அரசு தன்னுடைய இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்