• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விளவன்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி காங்கிரஸ்யில் இருந்து விலகியதோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், நடக்கும் இடைத்தேர்தலில். அதிமுக சார்பில் மாநில மகளிர் அணியின் துணைச் செயலாளராக இருக்கும் ராணியை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வின் வேட்பாளராக. அதிமுக வின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதிமுக குடும்பத்தை சேர்ந்த ராணி,இவரது 19_ம் வயதிலிருந்தே அதிமுக வில் பயணிப்பதாகவும்,பட்டப்படிப்பை முடித்துள்ளார் நிலா என்னும் தொண்டு நிறுவனத்தை கடந்த 14ஆண்டுகளாக ,நடத்தி வருகிறார். மற்றும் பெண்கள் குழு மூலம் பெண்களுக்கு பல்வேறு வகையான உதவிகள் செய்து வருவதாக தெரிவித்தவர்.

கழகத்தின் தலைவர் என் மீது நம்பிக்கை வைத்து என்னை விளவங்கோடு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதற்கு உரு துணையாக இருந்த அண்ணன் தளவாய் சுந்தரத்திற்கு அவரது நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்..

விளவங்கோடு தொகுதியின் தேர்தல் வரலாறு.

குமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் பகுதியாக இருந்த காலையில் இரண்டு முறை தமிழ் நாடு காங்கிரஸ் சார்பில் கேரள சட்டசபைக்கு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. அதன் பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் 10 முறையும், கம்யூனிஸ்டு கட்சி 6-முறையும் வெற்றி பெற்றுள்ளது.

விளவங்கோடு சட்ட மன்ற தேர்தல் வரலாற்றில் தி மு க.,அ தி மு க.,இதுவரை வெற்றி பெற்றதே இல்லை.