• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாநில சுமை தூக்குவோர் சங்க கொடி ஏற்று விழா மற்றும் பலகை திறப்பு விழா

ByJawahar

Feb 12, 2023

ஸ்ரீரங்கம் அதவத்தூர் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கி அருகில் மாநில சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றி சங்கப் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மாவட்ட செயலாளர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளருமான சதீஷ்குமார் தலைமையிலான நிகழ்ச்சியில் , மாநில துணை செயலாளர் மதுரை தெய்வேந்திரன் மற்றும் தமிழ்நாடு தனியார் ஆசிரியர் ஒருங்கிணைப்பு அறக்கட்டளை நிறுவனர் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து சங்க பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.மாநில இணைச்செயலாளர் ரவி , மாநில செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், ரங்கராஜ் மாவட்டத் தலைவர் யேசுதாஸ், பொருளாளர் தர்மராஜ் மற்றும் ஸ்ரீரங்கம் அதவத்தூர் கிட்டங்கி சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பணி நிரந்தரம், அடிப்படைச் சம்பளம், பணி பாதுகாப்பு ,சங்க தேர்தலை உடனடியாக நடத்துவது போன்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.