• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் மாநில அளவிலான யோகாசன போட்டி

BySeenu

Feb 13, 2025

கோவையில் மாநில அளவிலான நடைபெற்ற யோகாசன போட்டியில் சிறுவர், சிறுமியர் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கோவையில் மாநில அளவிலான யோகாசனா 2025 போட்டிகள் திருச்சி சாலையில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.எக்சலென்ஸ் பள்ளியில் நடைபெற்றது.

கோவை நானா யோகா மையம்,ஓசோன் யோகா மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.
எக்சலென்ஸ் பள்ளி ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,கோவை,திருப்பூர்,ஈரோடு,
நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் மழலை பள்ளி குழந்தைகள்,பெரியவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ரூ காண்டினம் முதல்வர் மீரா பல்லா, மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்.பள்ளி முதல்வர் ஜான் ஹாரீஸ், திருச்சி சாலை எக்சலென்ஸ் பள்ளி முதல்வர் ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.

வயது அடிப்படையில் தனித்தனியே நடைபெற்ற போட்டிகளில் மூன்று வயது முதலான சிறுவர், சிறுமிகள் உட்பட பல்வேறு வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சக்ராசாசனம், வஜ்ராசானம் பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்.

உடல் ஆரோக்கியம்,மன வலிமை போன்றவற்றை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறுவயது முதலே வழங்கும் விதமாக இது போன்ற யோகா போட்டிகள் நடத்துவதாகவும், இந்த போட்டிகளில் தேர்வு செய்யும் மாணவ,மாணவிகள் அடுத்து துபாயில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.