• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி..,

ByK Kaliraj

Nov 21, 2025

மாநில அளவிலான மகளிர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி கபடி போட்டி திருச்சி 21. 11.2025 22 .ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது இதில் 38 மாவட்ட சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் கபடி வீராங்கனைகள் கடந்த இரண்டு தினங்களாக இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் பயிற்சி பெற்றனர். பயிற்சி முடித்து இன்று (21.11. 2025) நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டிக்கு செல்லும் விருதுநகர் மாவட்ட வீராங்கனைகளை இராஜபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு அவர்களை வெற்றி பெற வாழ்த்து வழி வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக தலைவர் ஏ பி எஸ் சுப்பிரமணிய . மாவட்டச் செயலாளர் கனி முத்துக்குமரன்
(இன்கம் டேக்ஸ் கண்காணிப்பாளர்) கலந்து கொண்டனர்.

திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டிக்கு செல்லும் விருதுநகர் மாவட்ட கபடி அணி வீராங்கனைகளுக்கு இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய மீனாட்சிபுரம் திமுக கிளை செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் S.அருள் சத்யா விளையாட்டு உபகரணங்கள் டீசர்ட் . பேக். தண்ணீர்கேன். போன்றகளை வழங்கி வெற்றி பெற வாழ்த்தினார்.