தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் காமயம் கைப்பந்தாட்ட கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியானது நேற்று, இன்று என இரு நாட்கள் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இன்று இறுதிச்சுற்று நடைபெற்றது.
இந்த கைப்பந்தாட்ட போட்டியில் தேனி மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் சுமார் 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட அணிகளில் வெற்றி பெறும் முதல் ஐந்து அணிக்கு பரிசுகள் சுழல் கோப்பை மற்றும் ரொக்கதொகை பரிசாக வழங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதல் பரிசை கம்பம் அணியினர் பெற்றனர். முதல் பரிசை பெற்ற கம்பம் அணியினருக்கு ஆறடி உயரம் உள்ள சுழல் கோப்பையும், 11 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு பெற்ற காங்கேயம் அணிக்கு ஐந்து அடி உயரம் உள்ள சுழல் கோப்பையும், 8,000 ரூபாய் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த கைப்பந்தாட்ட போட்டியை ஏராளமான கைப்பந்தாட்ட ரசிகர்கள் கண்டுகளித்தனர்.