• Wed. Mar 19th, 2025

இரத்த தானம் செய்தல் மற்றும் போதை பொருள் தடை செய்தலை வலியுறுத்தி, மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

ByKalamegam Viswanathan

Jan 28, 2024

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூரில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரத்த தானம் செய்தல் மற்றும் போதைப்பொருள் தடை செய்தலை வலியுறுத்தி இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சிங்கராஜ் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.

மாணவர்களுக்கான 8,கி.மீ, மாணவிகளுக்கான 5கி.மீ, சிறுவர்களுக்கான 3 கி.மீ என மூன்று வகைகளில் வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை, சென்னை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த 1800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.