• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி

ByJeisriRam

May 30, 2024

தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழகம் முழுவதும் சுமார் 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, பரமக்குடி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பல்வேறு அணிகளாக கலந்து கொண்டு இப்போட்டியில் பங்கேற்றனர்.

12, 14, 15 மற்றும் 19 ஆகிய வயதுக்கு ஏற்ப பிரிவுகள் பிரிக்கப்பட்டு 100 மீட்டர் 200 மீட்டர் 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டி எறிதல் மற்றும் தொடர் ஓட்டப் பந்தயம் என பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த யு.எஸ்.ஏ அத்லெட்டிக் அகாடமி அணி 248 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்திற்கான சுழற் கோப்பையை வென்றது பரமக்குடி அசூகரன் அணி 167 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திற்கான சுழற் கோப்பையை வென்றது.

இந்த விளையாட்டுப் போட்டியில் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் தனியா ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.