• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

அகழாய்வில் சுடுமண்ணால் நட்சத்திர அணிகலன்கள்..,

ByK Kaliraj

May 13, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம்
3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுப்பு இதுவரை அகழ்வாய்வில் சுமார் 4,750-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு-அகழ்வாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தகவல். மேலும் வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் பதிவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பகோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை,சதுரங்க ஆட்ட காய்கள்,கண்ணாடி மணிகள்,வட்ட சில்லு,சங்கு வளையல்கள் உள்ளிட்ட 4750-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தோண்டிய குழியில் 1.90 மீட்டர் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1.8 மி.மீ சுற்றளவும், 0. 6 மி.மீ கணமும், 3. 4 கிராம் எடையும் கொண்ட இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

பழந்தமிழர்களின் கலை நயத்திற்கு மேலும் ஒருசான்றாக சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கிடைத்துள்ளன என தொல்லியல் அகழ்வாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் பொன் பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தள பக்கத்தில், வியக்க வைக்கும் வெம்பக்கோட்டை” ஆச்சர்யங்கள் நிறைந்த பல தொல்பொருள்களை தன்னுள் வைத்திருக்கும் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வுத் தளத்தில் ஆழத்தில், சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அணிகலன் அதன் இணையோடு கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பு. இன்னும் பழந்தமிழர் பொக்கிஷங்கள் பலவற்றை தொல்லியல் துறை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என பதிவிட்டுள்ளார்.