மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வருகை புரிந்து கலைஞர் மகளிர் உரிமைத்
தொகை விண்ணப்பங்கள் முதியோர் / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை ஆதார் அட்டை திருத்தம் மற்றும் புதிய பதிவு ரேஷன் கார்டு திருத்தம் மற்றும் புதிய விண்ணப்பம் பிறப்பு / இறப்புச் சான்றிதழ் என மொத்தமாக 46 வகையான அரசு சேவைகளுக்கு மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன் மற்றும் ஜோதிராஜ் வட்டாட்சியர் மனேஷ்குமார் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
கண்ணன் மனோகரன் முத்துக்கிருஷ்ணன் கண்ணன் மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த சிறப்பு அரசு அதிகாரிகள், மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சக்கிமங்கலம் ஊராட்சி செயலர் மணிகண்டராஜா சிறப்பாக செய்திருந்தார்.