மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சோழவந்தான் எம் வி எம் மருது மஹாலில் நடைபெற்றது. சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பேரூராட்சி மன்ற தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். வாடிப்பட்டி வட்டாட்சியர் சோழவந்தான் பேரூராட்சி,செயல் அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
கூட்டுறவு சார் பதிவாளர் கார்த்திகேயன், நகர கூட்டுறவு வங்கி மேலாளர் வீரணன், மதுரை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சோழவந்தான் கிளை பார்த்தசாரதி, சரக மேற்பார்வையாளர் முருகன் ,வாடிப்பட்டி வேளாண் விற்பனை மேலாளர் முருகன், சோழவந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ரமேஷ், தென்கரை கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயலாளர் செல்லப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.