தமிழக முழுவதும் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்தியமுறை மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 சிறப்பு மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

மேலும், முதல்-அமைச்சரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் இந்த நலம் காக்கும் ஸ்டாலின் முகம் இன்று கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் நடைபெற்றது.
இந்த முகாமில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ,தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு பெட்டகங்கள் வழங்குதல் நலவாரிய கார்டு வழங்குதல் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்குதல் மற்றும் பல்வேறு மருத்துவ சேவைகள் தொடர்பான சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
இன்று நடைபெற்ற முகாமில் கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும் முகாமில் கலந்து கொண்டு பல்வேறு மருத்துவ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.