
மதுரையில் பெய்த மழையில் சுவர் இடிந்து 3 பேர் பலியான குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை முதலமைச்சர் வழங்க வேண்டும்
டாஸ்மாக் விவகாரத்தில் உரிய விளக்கத்தை முதலமைச்சர் சொல்ல மறுப்பது ஏன்?சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்ட வீடியோ பதிவுநடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக ஸ்டாலின் அரசு இன்றைக்கு எப்படி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது என்பதற்கு பல சான்றுகளை ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக மழைக்காலங்களில் மக்களை பாதுகாப்பதில் இந்த அரசு தவறி இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தென்மேற்கு பருவமழைக்கு ஆயத்த நிலை ஆய்வு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிற போது மதுரையிலே சுவர் இடிந்து 3 பேர் உயிரிழப்பு என்கிற செய்தியை நாம் பார்க்கிறோம்.
வளையங்குளம் கிராமத்தில் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது மழையால் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வெங்கட்டி என்று பெண் (55) வீரமணி (10) வீரமணி பாட்டி அம்மா பிள்ளை (65 )ஆகியோர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோட்டையில் அமர்ந்துகொண்டு உத்தரவிடுகிறார் அறிக்கை விடுகிறார். ஆனால் அதை கடைக்கோடியில் கொண்டு போய் சேர்ப்பதிலே இந்த அரசு முழுமையாக இன்றைக்கு மக்களிடத்திலே திட்டத்தை சேர்க்கவில்லை.
முதலமைச்சர் மேட்டூர் அணை திறப்பதற்கான நடவடிக்கை என்று அவர் அறிக்கை வெளியிடுகிறார், அறிவுரை கூறுகிறார். ஆனால் இங்கே அவர் பேசிக் கொண்டிருக்கிற போது 3 பேர் இறந்திருக்கிறார் இது ஒரு உதாரணம் தான். உயிரிழப்பு, பொருட் சேதம் எதுவும் இல்லாமல் பருவமழை காலத்தை எதிர் கொள்வது தான் ஒரு அரசனுடைய பிரதான கடமை.
வடகிழக்கு பருவமழை,தென்மேற்கு பருவமழை எதுவாக இருந்தாலும் முதலமைச்சரின் ஆய்வுகள், அறிக்கைகள், கூட்டம் இதன் ஜீரோவாக தான் உள்ளது அரசுத்துறை ஒருங்கிணைப்பு இல்லையா? அல்லது முதலமைச்சர் அறிக்கையை கொண்டு போய் சேரவில்லையா? உரிய அழுத்தவும், கண்காணிப்பும் கொடுக்கப்படவில்லையா? என்பதெல்லாம் மக்களிடத்திலே ஆயிரம் கேள்வியாக இருக்கிறது.
வங்க கடலிலே வளிமண்டல சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மிக கனமழை இருப்பதாக தெரியப்படுத்தப்பட்ட பிறகு இங்கே வளிமண்டலத்தினுடைய சுழற்சி ஒரு புறத்தில் இருந்தாலும், அரசனுடைய மற்றொரு சுழற்சியை நாம் பார்க்கிற போது இன்றைக்கு டாஸ்மார்க் ஊழலில் மிகப்பெரிய அளவிலே தமிழ்நாட்டிலே ஒரு பேர் அதிர்ச்சி உருவாகி இருக்கிறது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலே இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டிய நபர்களான ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் ஆகியோரை தேடி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ,டாஸ்மாக் துறை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் விசாரணை என்பதுதான் ஒரு சுழச்சியாக பேர்அதிர்ச்சியோடு இந்த மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
என்ன நடக்கிறது, அரசு என்பது மக்களுக்காக தான். இந்த அரசு ஏழை,எளிய மக்களுக்காகவா? அல்லது கருணாநிதி குடும்பத்திற்காகவா என்ற ஒற்றைக் கேள்விதான் இன்றைக்கு எழுந்திருக்கிறது ஆகவே அரசு யாருக்காக ஸ்டாலின் குடும்பத்திற்காக? தமிழக மக்களுக்காக ?இந்த கேள்விக்கு விடைதேடி அலைகின்றார்கள்.
ஆகவே இன்றைக்கு மழையால் பலியான மூன்று பேர் குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் அதேபோன்று டாஸ்மார்க் முறைகேட்டில் உரிய விளக்கங்களை முதலமைச்சர் சொல்ல முன் வர வேண்டும், எப்போதும் போல ஸ்டாலின் மௌனம் காத்தால் மௌனமே சம்மத்திற்கு அறிகுறியாகும் என கூறினார்.
